தவெக-வுக்கு எதிராக பிரசாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

TVK
By Fathima Sep 10, 2026 10:58 AM GMT
Report

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக-வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ”தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” என த.வெ.க. வாக்குறுதி அளித்திருந்தது.

தவெக-வுக்கு எதிராக பிரசாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு | Campaign Against Tvk Statement

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.

தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் சூழலில், பாகுபாடின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் த.வெ.க. அரசு கண்டு கொள்ளவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அரசின் இந்த விவசாய விரோதப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், விவசாயிகளை ஒன்றுதிரட்டி த.வெ.க.வை தோற்கடிக்க தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.