நிர்வாணமாக வந்தால் நிறைய பணம் - பெண்களை ஷூட்டுக்கு அழைத்த காமக்கொடூர கேமராமேன்!!
மேற்கு வங்கத்தில் பல பெண்களை நிர்வாணமாக படமெடுத்து விற்பனை செய்து வந்த ஒரு கேமராமேனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவின் பிதானநகர் பகுதியில் வசிக்கும் ரோனி, ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு திரைப்படங்களில் கேமரமேனாக பணியாற்றியுள்ளார்.
இவர் மீது மாடல் நடிகை நந்திதா தத்தா, பல பெண்களை இவர் நிர்வாணமாக நடிக்க சொல்வதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நீயூ டவுன் ஹோட்டலில் வீடியோ ஷூட்டுக்காக இவர் பல பெண்களை நிர்வாணமாக படமெடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த காமக்கொடூர கேமராமேனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.