விதவிதமாக கேமராவில் கரடி எடுத்த 400 செல்பி...! - வைரலாகும் புகைப்படம்...!
அமெரிக்காவில் விலங்குகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராவில் 400 செல்பிகளை கரடி வித்தியாசம் வித்தியாசமாக எடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேமராவில் 400 செல்பிகளை எடுத்த கரடி
அமெரிக்கா, கொலராடோவில் உள்ள பூங்கா காவலர்கள் கேமராவை சரிபார்த்தபோது ஒரு ஆச்சரியத்தைக் கண்டனர். Boulder, Colorado's Open Space and Mountain Parks (OSMP) அமைப்பு வனவிலங்கு வாழ்விடங்களை தடையின்றி கண்காணிக்க விரும்பியது.
இதனையடுத்து, பூங்கா காவலர்கள் 46,000 ஏக்கரில் 9 கேமராக்களை பொருத்தி விலங்குகள் எவ்வாறு அந்தப் பகுதியைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கண்டனர். இதன் பிறகு, அப்பகுதியில் வைக்கப்பட்ட 9 கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, பூங்கா பாதுகாவலர்கள் கரடியின் நூற்றுக்கணக்கான செல்பி புகைப்படங்களைக் கண்டுபிடித்தனர். கைப்பற்றப்பட்ட 580 புகைப்படங்களில், சுமார் 400 கரடி செல்ஃபிகள் என்று OSMP தகவல் தெரிவித்துள்ளது. கேமரா பொறிகளிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உருவாக்கிய ஆய்வில் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.