U19 உலகக்கோப்பை பைனலில் பெண்கள் ஆபாச நடனம் - ரசிகர்கள் அதிர்ச்சி
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனமாடியது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க வருகை தந்த நிலையில், மைதானத்திற்கு வந்த பார்வையாளர்களை குஷிப்படுத்துவதற்காக ஐசிசி சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது.
அந்த வகையில் மேற்கிந்திய தீவுகளில் மிகவும் பிரபலமான கலிப்சோ நடனத்தில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்து இடுப்பை மட்டும் ஆட்டி வினோத நடனமாடுவது அந்த நாட்டின் கலாச்சாரமாகும்.இந்த கலிப்சோ திருவிழாவை பார்க்கவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து பெண்களின் நடனத்தை பார்ப்பது வழக்கம்
இதனால் இறுதிப் போட்டிக்காக கலிப்சோ நடனமாடும் பெண்களை ஐசிசி நியமித்துள்ளது. அண்டர் 19 வீரர்கள் பவுண்டரி விளாசும் போதும், விக்கெட் எடுக்கும் போதும் இந்த பெண்கள் அரைகுறை உடையுடன் ஆபாச நடனமாடினர். இது தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டது.
மேலும் மேற்கிந்திய தீவுகளில் வெயில் அதிகம் என்பதால், அங்கு பலரும் நீச்சல் உடையில் சூரிய குளியல் போடுவது சர்வ சாதாரணம். இதனால், அவர்கள் கலாச்சாரம் முற்றிலும் இந்தியாவுக்கு எதிர்மறையாக இருக்கும். கிரிக்கெட் போட்டி என்றால் கேட்கவா வேண்டும், பல பெண்களும் அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஓய்யாரமாக படுத்திருந்தனர்.
இது இந்திய நேரப்படி இரவு நடைபெறுவதால் 18 வயதிற்கு குறைந்தவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என நம்பப்படுகிறது.