சசிகலாவை ஏன் வீர தமிழச்சி என அழைத்தேன்? இயக்குநர் பாரதிராஜா விளக்கம்
சசகிலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரைச் சுற்றிய அரசியல் பரபரப்புகள் எல்லாம் அடங்கிவிட்டன. இதற்குப் பிறகு அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியப்படும் எனச் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலா சீமான் தொடங்கி பாரதிராஜா வரை பல்வேறு பிரபலங்கள் சந்தித்திருந்தனர்.
இயக்குநர் பாரதிராஜா அவரை வீரத் தமிழச்சி என அழைத்திருந்தனர். தற்போது சசிகலாவை ஏன் அவ்வாறு அழைத்தேன் என விளக்கம் அளித்துள்ளார். அதில், “சசி அம்மாவை 32 வருஷமா எனக்கு தெரியும். நான்கு வருடம் சிறையில் இருந்த அந்த அம்மா ஓடி ஒளியாம, மக்களை சந்திப்பேன்னு துணிச்சலா சொன்னாங்க.
அதனால்தான் அவங்களை வீரத்தமிழச்சின்னு சொன்னேன். இனியும் சொல்வேன். ஜெயலலலிதா அம்மாவுக்கு துணையா இருந்து பல கஷ்டங்களை பார்த்தவர். அவர் பட்ட கஷ்டங்களை வேற யாரும் செய்யமுடியாது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து தேறி வந்துள்ளார். அதனால் மரியாதை நிமித்தமாக அவரை சென்று பார்த்தன்.
இதில் என்ன தப்பு இருக்கிறது” என்றார்.
தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த சசிகலா, நேற்று வெளியிட்ட அறிக்கையில் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்தார். ’நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து அம்மாவின் ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் என உளமார்ந்த நன்றி’ என்றும் தெரிவித்திருந்தார்.