இனிமேல் வாக்கு சேகரிக்க கூப்பிடாதீங்க.. கையெடுத்து கும்பிட்டு கேட்ட நமீதா கணவர்! நடந்தது என்ன?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு சில நாட்கள் உள்ளது. இதனையடுத்து, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி, அமமுக தலைமையில் ஒரு அணி, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவ தீவிர பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடிகை நமீதா 4 இடங்களில் இன்று பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் இடமான மருதுபாண்டியர் சிலை அருகே காலை 9 மணிக்கு நமீதா அன்று சென்றார். ஆனால், அங்கு போட்டியிடும் வேட்பாளர் வரவில்லை.
உடனே அந்த பிரச்சாரத்தை ரத்து செய்தார் நமீதா. அதனையடுத்து, தேவர் சிலை மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பிரச்சாரம் செய்ய சென்றார். அங்கும் வேட்பாளர் வராததால், தமிழக மீனவர்களுக்கு பிரதமர் மோடி செய்த உதவிகளை பட்டியலிட்டு ஆதரவு திரட்டி பேசினார். அதனையடுத்து, இறுதியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற இருந்த பிரச்சாரத்திற்கு சென்ற போது, அங்கு பாஜக வேட்பாளர் குப்புராம் வரவில்லை. இதனால், டென்ஷனான நடிகை நமீதா பிரச்சார பயணத்தை ரத்து செய்து விட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.
அங்கு சென்ற பாஜகவினர் மீண்டும் அவரை சமாதானம் செய்து ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைத்தார்கள்.
அப்போது நமீதாவும், நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி, "வேட்பாளர் இல்லாமல் இனிமேல் தங்களை வாக்கு சேகரிக்க கூப்பிடாதீங்க, நாங்கள் சென்னை செல்கிறோம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்டார். இதனால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.