வெவ்வெறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள் - இணையத்தில் வைரல்

born twins california differentyears
By Irumporai Jan 04, 2022 06:10 AM GMT
Report

நாம் கேள்விபட்டது வரை இரட்டை குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பிறந்த சில வினாடிகள் தான் மாறும் , ஆனால் அமெரிக்காவில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வருடமே மாறிபோய்விட்டது. வாருங்கள் அந்த அதிசய நிகழ்வினை தெரிந்துகொள்வோம்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் என்ன அதிசயம் உள்ளது ? என நீங்கள் கேட்கலாம் ஆனால் குழந்தைகள் பிறந்தது வெவ்வெறு வருடம் என்பதால் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் , அந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை டிசம்பர் மாதம் 31-ம் தேதி 2021 ஆண்டு இரவு 11.45 மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு 2022-ம் ஆண்டு பிறந்துள்ளது. சராசரியாக 15 நிமிட இடைவெளியில் இரட்டை குழந்தைகளின் வருடமே மாறிப்போய் விட்டது.

ஆகவே இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கூறுகையில் :

  தனது மருத்துவ பணி காலத்தில் இது மறக்க முடியாத ஒரு பிரசவம் என தெரிவித்துள்ளார். மேலும், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் பாத்திமா, தனது இரட்டைக்குழந்தைகள் வெவ்வெறு வருடத்தில் பிறந்திருப்பது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருவதாக அவர் கூறியுள்ளார்.