உயிரிழந்த கன்றின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட பசு ..அடுத்து நடந்த சம்பவம் - பீதியில் மக்கள்!
ஈன்ற கன்றுக்குட்டி இறந்ததை அறிந்த பசு செய்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஜஸ்தான்
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மேவார் மாவட்டத்தில் உள்ள அமெட் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்களின் பெரும்பாலான வீடுகளில் பசு, ஆடு ,மாடு , கோழி உள்ளிட்டவற்றை வளர்த்து வருகின்றனர்.
இந்த விலங்குகளைச் சாப்பிட மலைப்பாம்பு அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து அச்சுறுத்துவதாகக் கூறப்படுகிறது.சமீப மாதங்களில் அப்பகுதியில் ஏராளமான கால்நடைகளைத் தாக்கியுள்ளது. ஆனால் இதில் நல்வாய்ப்பாக மனிதர்களைத் தாக்கவில்லை.
இந்த நிலையில் நேற்றிரவு இரவு Agariya என்ற பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்று கன்றை விழுங்கி உள்ளது.ஆனால் கன்றுக்குட்டி அளவில் பெரியதாக இருந்ததன் காரணமாக, அதை ஜீரணிக்க முடியாமல் மலைப்பாம்பு மீண்டும் வெளியே துப்பிவிட்டுச் சென்றுள்ளது.
கன்றுக்குட்டி
மறுநாள் காலை கன்றுக்குட்டி இறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.அதுமட்டுமில்லாமல் இறந்த கன்றின் உடலைப் பார்த்த பசுவின் கண்கள் கண்ணீர் விட்டு அழுதது.
இப்பகுதியில் மலைப்பாம்புகளைப் பிடிக்கும் வகையில் கூண்டு அமைக்குமாறு வனத்துறையிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கிராம மக்களிடையே பீதி நிலவுகிறது.