குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் - தமிழக அரசு உத்தரவு

TVK
By Yashini Oct 23, 2026 07:19 AM GMT
Report

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு

நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக முதலில் ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது.

இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன.

குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் - தமிழக அரசு உத்தரவு | Cake For School Students On Children Day Tn Gov

ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், கேக்குகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவற்றைப் பெறும்போது காலாவதியாக குறைந்தது 30 நாட்கள் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கேக் வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் - தமிழக அரசு உத்தரவு | Cake For School Students On Children Day Tn Gov

இதன்படி, 4 நிறுவனங்களிடம் இருந்து கேக்குகளைக் கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 62,46,412 கேக் துண்டுகள் ரூ.7.54 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.