உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - முதல் பதக்கத்தை வென்று இந்திய வீரர் அசத்தல்...!

Shooting
By Nandhini Feb 20, 2023 06:29 AM GMT
Report

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் பிஸ்டல் போட்டியில் இந்தியா தன்னுடைய முதல் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது.

முதல் பதக்கத்தை வென்று இந்திய வீரர் அசத்தல்

எகிப்தின் கெய்ரோவில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பை துப்பாக்கி / பிஸ்டல் போட்டி நடைபெற்றது. இபபோட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவில், 64 பேர் கலந்து கொண்டனர். சுலோவேக்கியா நாட்டின் ஜுராஜ் டுஜின்ஸ்கி 585 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இந்தியாவின் மற்றொரு வீரரான சரப்ஜோத் சிங் 5-வது இடத்திற்கு முன்னேறினார். இப்போட்டி முடிவில் 8 பேர் தேர்வு பெற்றனர். அவர்களில் 2 இந்திய வீரர்களும் அடங்குவர்.

வருண், போட்டிகளின் முதல் நாளில் போட்டியிட்டார். இருவரும் தரவரிசைச் சுற்றில் 250.6 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்த பிறகு, ஷூட்-ஆஃப் ஒன்றில் சக வீரர் சரப்ஜோத் சிங்கை வீழ்த்தினார்.

இப்போட்டியில், ஸ்லோவாக்கியாவின் அனுபவமிக்க துப்பாக்கி சுடுதல் வீரர் ஜுராஜ் துஜின்ஸ்கி 17-15 என்ற கணக்கில் இத்தாலியைச் சேர்ந்த பாலோ மோனாவை தோற்கடித்து தங்கம் வென்றார்.

இப்போட்டியில் 19 வயதான வருண் தோமர், எகிப்து இன்டர்நேஷனல் ஒலிம்பிக் சிட்டி ரேஞ்சில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார். 

cairo-shooting-world-cup-varun-toma-1-st-medal