''அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்” - தொண்டர்கள் முழக்கத்தால் பரபரப்பு
அதிமுக வில் கடந்த சில வருடம்காவே ஓபிஎஸ் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது .
எடப்பாடியை ஆரம்பம் முதலே விமர்சித்த முன்னாள் நிர்வாகி புகழேந்தி சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும். இல்லையென்றால் ஓபிஎஸ் ஆக வேண்டும். எடப்பாடி நீக்கப்பட வேண்டும் என தடாலடியாகக் கூறினார்.

அவர் கொளுத்திப் போட்டது இன்று தேனி வரை கொளுந்துவிட்டு எரிகிறது. இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி. ஆனால் ஓபிஎஸ் பசும்பொன் போகவில்லை. அதற்குப் பதிலாக தேனி மாவட்டத்திலேயே தேவர் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்தார்.
அப்போது முழக்கமிட்ட தொண்டர்கள், அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் என முழங்கினர். அதற்கு எசப்பாட்டாக வாழ்க கோஷமும் ஒலித்தது. இதன் மூலம் அதிமுக வில் மீண்டும் ஓ.பி எஸ் -ன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.