முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

M K Stalin DMK
By Irumporai 2 மாதங்கள் முன்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று அமைச்சர்களுடன் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.

முதலமைச்சர் தலைமையில் கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 29ஆம் தேதி முதல்வர் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கிய அறிக்கை ஆகியவற்றின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் | Cabinet Meeting Chaired By Cm Stalin Today

இன்று கூட்டம்

இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. தமிழக அமைச்சரவை தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் இதில் இடம்பெறுகிறது .புதிய தொழில் முதலீடுக்கான அனுமதி சலுகைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.