குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரும் பட்ஜட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

Muslims MK Stalin CAA
By Thahir Jun 22, 2021 01:10 PM GMT
Report

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பட்ஜட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்மன்ற உறுப்பினர் தமிழரசி மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு சந்தர்பங்களில் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரும் பட்ஜட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! | Caa Mkstalin

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்ப பெறும் தீர்மானமும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.