குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் அனுமதிக்க மாட்டோம்! - கேரள முதல்வர் பினராயி விஜயன்

india law amit shah
By Kanagasooriyam Feb 15, 2021 01:07 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

in இந்தியா
Report

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்த படும் என கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், எங்கள் மாநிலத்தில் கண்டிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

மேலும், ஒரு மாநில அரசாக இதை நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று எப்படி உங்களால் கூற முடிகிறது என்று மத்தியிலிருந்து கேட்கப்பட்ட போது நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம், கண்டிப்பாக எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதம் எழுந்த போது அதை எதிர்த்த முதல் மாநிலம் கேரளா என்பதும் குறிப்பிடத்தக்கது.