எதிர்கட்சிகள் தங்கள் வேலையை துவங்கியதா? திமுக விடியல் அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆர்பாட்டம்!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக விடியல் அரசை கண்டித்து முன்னாள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு உரிமைக்குரல் முழக்க போராட்டத்தில் கையில் பதாகை ஏந்தியவாறு திமுக அரசுக்கு எதிரான கண்டன குரல்களை எழுப்பினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக விடியல் அரசை கண்டித்து அதிமுக சார்பில் அவரவர் வீடுகளுக்கு முன்பு உரிமைக்குரல் போராட்டம் நடைபெறும் என அதிமுக கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக உடல் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டார்.
அப்போது தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்கின்ற திமுக அரசை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கண்டித்தும் ,
டீசல், பெட்ரோல் விலை ஆகியவை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்தும், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காததை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்யாமல் மாணவர்களை
ஏமாற்றிய திமுக அரசை கண்டித்தும், மேகதாது அணை விவகாரத்தில் மெளனம் காக்கும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் அதிமுக சட்டமன்ற
உறுப்பினர் அர்ஜுனன் நகர செயலாளர் தீனதயாளன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர்கள் மாவட்ட கழக பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.