புதுவிதமான ஆன்லைன் மோசடி - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு...!

Tamil Nadu Police
By Nandhini Aug 18, 2022 03:12 PM GMT
Report

ஆன்லைன் மோசடி

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் மோசடி தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. போலி பெயர்கள், போலி புகைப்படங்கள், போலி இ-மெயில்கள், போலி ஆவணங்கள், போலி வேலை வாய்ப்புகள் என்று பல வழிகளில் ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகிறது.

பொதுவாக, போலி இ-மெயில்கள் அனுப்பி உங்களின் ஆன்லைன் வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை அறிந்து கொள்வது மூலம் இந்த மோசடிகள் நடைபெறுகிறது.

c-sylendra-babu-tamilnadu-police

விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட டிஜிபி

இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதுவிதமான ஆன்லைன் மோசடி தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசுகையில், நீங்கள் எங்க வேலை பார்க்கிறீர்களோ, அந்த நிறுவனத்தின் அதிகாரி போல் போன் செய்து, மீட்டிங்கில் இருக்கிறேன் கிப்ட் கூப்பன் வாங்கி அனுப்புங்க... அமேசான் கிப்ட் கூப்பன் தேவைப்படுகிறது.

அந்த கூப்பனை வாங்கி அனுப்புங்க. ஒரு கூப்பன் விலை 10 ஆயிரம் ரூபாய். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்க. அப்புறம் உங்களுக்கு வாங்கி வாங்கி கொடுத்துவிடுகிறேன் என்று கேட்பாங்க.. இந்த மோசடியில் போய் சேர்ந்தீங்கன்னா உங்கள் பணம் போக வாய்ப்பு இருக்கிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பேசியுள்ளார்.

இதோ, மேலும் இது குறித்த வீடியோ -