உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு... - துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய டிஜிபி...!
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
காவலர் வீரவணக்க நாள்
இந்தியா முழுவதும் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மரியாதை செலுத்திய டி.ஜி.பி. சைலேந்திர பாபு
இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக டிஜிபி மலர் வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முப்படை அதிகாரிகள், காவல் உயரதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.