ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு

DGP Wishes C. Sylendra Babu Auto Driver Called
By Thahir Jan 27, 2022 09:51 PM GMT
Report

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.

இவர் தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.

ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு | C Sylendra Babu Called The Auto Driver Wishes

மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார். நேற்று (27.1.2022), ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.