தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் 2 வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த மாதம் ஆடிட்டர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் வட மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் தமிழ்நாட்டிலுள்ள வெளிமாநிலத்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குல்ஃபி, பானிப்பூரி விற்பவர்கள் உட்பட அத்தனை பேர் விவரங்களும் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொருவரின் ஆவணங்களையும் வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
![வீட்டில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மலர்கள் வைப்பவரா நீங்கள்....! இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்](https://cdn.ibcstack.com/article/1e0d98b0-58e4-47b0-a30b-2db9fdb408a0/25-67a5f2b8e80d0-sm.webp)
வீட்டில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மலர்கள் வைப்பவரா நீங்கள்....! இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் IBC Tamil
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)