சினிமா நடிகர்களை நம்பி ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள்... - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என நினைத்து அறியாமையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கி பலர் மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனில் மூழ்கி வேறு வழியின்றி தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அவலநிலை நீடிக்கத்தான் செய்கிறது.
அதேபோல் ரம்மி விளையாட கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்கிறார்கள் என்பதற்காக யாரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட வேண்டாம். இது உண்மையான ஆன்லைன் ரம்மி விளையாட்டு கிடையாது. ஆன்லைன் ரம்மி ஒரு மோசடி. தயவு செய்து ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.