ஜார்க்கண்டின் புதிய ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
BJP
Jharkhand
By Irumporai
தமிழக பாஜக மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்டின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்றுள்ளார்.
ஜார்க்கண்டின் புதிய ஆளுநர்
ஆகவே பாஜகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் கடந்த 15 -ம் தேதி ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஆளுநராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்ற நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

11வது ஆளுநர்
ஜார்க்கண்ட்டின் 11வது ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹெமந்த் சோரன், அமைச்சரவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்