ராகிங் என்ற பெயரில் MBBS மாணவர்களை ஆடைகளை கழற்றி அடித்து, உதைத்து சித்ரவதை - 7 பேர் சஸ்பெண்ட்

Tamil nadu Viral Video
By Nandhini Nov 10, 2022 05:57 AM GMT
Report

ராகிங் என்ற பெயரில் MBBS மாணவர்களை ஆடைகளை கழற்றி அடித்து, உதைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

MBBS மாணவர்கள் சித்ரவதை

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆடைகளை கழற்றி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட சக மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, கல்லூரி நிர்வாகம் ராகிங் செய்த 7 மூத்த மருத்துவ மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.    

c-m-college-vellore-ragging-viral-video