தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

Election
By Fathima Sep 07, 2026 12:34 PM GMT
Report

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல்(மதுராந்தகம்), ஜெயக்குமார்(பெருந்துறை), சத்யபாமா(தாராபுரம்), இசக்கிசுப்பையா(அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.

இவர்களை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர்(விராலிமலை) மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்(கரூர்) தொகுதி எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இத்துடன் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து 7 தொகுதிகள் காலியானதாக இருந்தது.

தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் | Byelection Announced For Maduranthakam Dharamapuri

இந்நிலையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் 17ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ம் தேதி வாக்குபதிவு நடைபெற்று அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.