இன்று 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்.. இந்தியா - பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சை!

Indian National Congress BJP Election
By Vinothini Sep 05, 2023 05:11 AM GMT
Report

6 மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

காலியான தொகுதிகள்

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மறைவால் காலியாக உள்ள புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதி, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

by-election-in-6-states

உத்தரப்பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் வெற்றிடமானது.

இடைதேர்தல்

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் காலை முதல் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

by-election-in-6-states

மேலும், இந்தியாக இடைத்தேர்தல் இந்தியா கூட்டணி மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இடையில் நடக்கும் முதல் தேர்தல், அதனால் மக்கள் ஆர்வமாக வாக்குகளை அளித்து வருகின்றனர்.