அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமானுக்கு ஆதரவா? ஸ்டாலின் பதில்!

M K Stalin Tamil nadu Seeman Election
By Vinoja Oct 30, 2026 12:08 PM GMT
Report

அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இதுவரை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.மேலும், தேர்தலில் மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமானுக்கு ஆதரவா? ஸ்டாலின் பதில்! | By Election Dmk Support Seeman Mk Stalin Response

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அத்தொகுதியில் போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது. 

மு.க. ஸ்டாலின் பதில்

இதற்கிடையே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு அளிப்பீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு, "தேர்தல் தேதி அறிவிக்கட்டும்; அதன் பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று பதிலளித்தார்.