6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

By Thahir Oct 03, 2022 08:12 AM GMT
Report

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு 

மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு | By Election Date Notification For 6 States

மேலும் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 14 வரை நடைபெற உள்ளது.

வேட்புமனு மீதான பரிசோதனை அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும்.வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 17 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.