ஒரே சமயத்தில் பிரச்சாரத்திற்கு வந்த இரு கட்சி வேட்பாளர்களால் சலசலப்பு
மதுரை திருப்பரங்குன்றத்தில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது . மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக வி.வி ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். அதேபோல திமுக கூட்டணி சார்பாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்டியிடுகின்றார்.
இவர்கள் இருவரும் இன்று ஒரே இடத்தில் அதாவது திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர் இதனால் ஒரே நேரத்தில் இருவரும் பிரச்சாரம் செய்ய வந்ததில் இருவருக்காகவும் கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது இருவரும் மாற்றி மாற்றி தங்களது கட்சியின் பாடல்களை போட்டதால் பெரும் பரபரப்பு உள்ளானது.
தொடர்ந்து இதனை காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கம்யூனிஸ்டு வேட்பாளர் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
பின்னர் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இதனால் அரை மணி நேரம் திருப்பங்குன்றம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.