சந்திரனில் இரண்டாவதாக கால் வைத்த ஆல்ட்ரின் - 93 வயதில் 4வது திருமணம்

Marriage World
By Thahir Jan 22, 2023 02:40 AM GMT
Report

சந்திரனில் 2வது கால்வைத்த பஸ் ஆல்ட்ரின், தனது 93ஆவது வயதில் நான்காவது திருமணம் செய்து கொண்டார்.

சந்திரனில் 2வது கால் பதித்ததவர்

ஆல்ட்ரின் அமெரிக்காவில் உள்ள மான்கிளேர் என்னுமிடத்தில் 1930 ஆம் ஆண்டு, ஜனவரி 20ஆம் தேதி பிறந்தார். இவர் 1951ஆம் ஆண்டு அமெரிக்க கல்விக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

ஆல்ட்ரின் அக்டோபர், 1963ஆம் ஆண்டு நாசாவில் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். இறுதியில் ஜூலை 16,1969ஆம் ஆண்டு, அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் இணைந்து சந்திரனை நோக்கிய பயணத்தில், நிலவில் ஆம்ஸ்ட்ரோங்கை அடுத்து சந்திரனில், ஆல்ட்ரின் இரண்டாவதாக கால் பதித்தார்.

93 வயதில் 4வது திருமணம் 

அதன்பிறகு 1971ஆம் ஆண்டு விண்வெளித்துறையிலிருந்து ஓய்வு பெற்றார். எட்வின் ஆல்ட்ரின் தனது 93 வது பிறந்தநாளில் தனது நீண்டகால தோழியான அன்கா ஃபாரை திருமணம் செய்துகொண்டார்.

buzz-aldrin-4th-marriage-at-93

திருமணப் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய தனியார் விழாவில் நாங்கள் புனித திருமணத்தில் இணைந்தோம், இளைஞர்களைப் போல உற்சாகமாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது அவருக்கு நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.