ஆடி ஆஃபரில் தக்காளி - ஒரு டீ'க்கு 1 கிலோ இலவசம்..!
புதிய வியாபாரத்தை பெருக்க சென்னையில் டீ கடை ஒன்றில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
தக்காளி விலை கிடு கிடு உயர்வு
ஆடி மாதம் என்றாலே துணிகளுக்கு விதவிதமாக சலுகைகள் அளித்து மக்களை துணை கடைகள் ஈர்ப்பது வழக்கமான ஒன்று.
அதில் இந்த வருடம் துணிகளை தாண்டி ஒரு புதிய வரவும் இணைந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் தற்போது தக்காளியின் விலை கடுமையான விலை உயர்வை எட்டியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இன்று கிலோ ஒன்றிற்கு 150 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், சில்லறை வணிகத்தில் 180 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது.
இந்த விலைவாசியை சற்று தனித்திட அரசு மானிய முறையில், தமிழகமெங்கும் 500 ரேஷன் கடைகளில் கிலோ ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.
மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும், அத்தியாவசிய தேவை தக்காளி என்ற காரணத்தினாலும், மக்கள் இன்னும் தவித்தே வருகின்றனர்.
ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்
இந்நிலையில் தான் சென்னை கொளத்தூரில் புதியதாக டீ கடை வியாபாரம் துவங்கியுள்ள கடையின் உரிமையாளர் இதனை பயனப்டுத்தி தனது வியாபாரத்தை பெருகிட முயன்றுள்ளார்.
தனது கடையில் இன்றும் நாளையும் அதாவது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் ஒரு டீ வாங்குவோருக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கி வருகின்றார்.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் அந்த கடையில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இது குறித்து டீ கடைக்காரர் டேவிட் கூறும்போது,
"புதியதாக டீ கடை திறந்ததால் ரூ.180-க்கு விற்கும் தக்காளியை இலவசமாக வழங்க முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டேன் என தெரிவித்துள்ளார்.