தீபாவளிக்கு தங்கம் வாங்க போறீங்களா? யோசிச்சுக்கோங்க.. எப்போது வாங்கலாம்!
தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை
இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும், தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என கருதப்படுகிறது.
எப்போது வாங்கலாம்?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
இதனால் தீபாவளிக்கு பின்பாக அமெரிக்க தேர்தல் முடிந்ததும் மக்கள் பலரும் தங்கம் வாங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது டாலரின் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயரும். தேர்தலுக்கு பின் டாலர் விலை கொஞ்சம் சீரடைய வாய்ப்பு உள்ளதால் அப்போது தங்கத்தின் விலை குறையும் வாய்ப்புகள் உள்ளன.