ஆன்லைன் மூலம் அமேசானில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வரும் புதிய கார்!
United States of America
Amazon
By Thahir
அமேசானில் கார் ஆர்டர் செய்யலாம்
அமேசானில் இனி தங்களுக்கு பிடித்த ஹூண்டாய் காரை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். உலக அளவில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தநிலையில், அமேசான் தளத்தில் இனி ஹூண்டாய் காரை வாங்கும் வசதி அறிமுகமாக உள்ளது.
முதல் கட்டமாக 2024ம் ஆண்டு அமெரிக்காவில் இந்த திட்டத்தை இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்த உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்த காரை ஆர்டர் செய்யலாம். மேலும் டோர் டெலிவரி வசதியும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.