ஆனாலும் என்னை மனசுக்குள்ள திட்டுவாங்க : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

tamilnadu poltics udayanidhistalin
By Irumporai Aug 07, 2021 09:54 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 3 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 2000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதில் முகாமினை தொடங்கிவைத்து பேசிய மு.க ஸ்டாலின் என்னை சேப்பாக்கம் தொகுதியின் செல்லப் பிள்ளை என கூறுகின்றார்கள் நான் தேர்தலின்போது 4 நாள் மட்டுமே தொகுதியில் பிரச்சாரம் செய்தேன் கட்சி நிர்வாகிகள் எனக்காக உழைத்து, பெரிய வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்ததால் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறேன்.

அமைச்சர்கள் கணேசன், மகேஷ் பொய்யாமொழி இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் நான் வழிகாட்டி என்று என்னை பாராட்டினாலும் மனதிற்குள் என்னை திட்டவே செய்வார்கள். காரணம் அவர்களின் தொகுதிக்கு அவர்களை செல்ல விடவில்லை என்று கோபம் இருக்கும் என கூறிய உதயநிதி .

சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி , ஜெ.அன்பழகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதாக கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.