அடுத்த வாரம் பூமி பூஜை .. த.வெ.க. கட்சி நிர்வாகிகள் எப்படி வரணும் தெரியுமா?- புஸ்ஸி ஆனந்த் தகவல்!
த.வெ.க. மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை நடைபெற உள்ளதாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
த.வெ.க.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரும் அக்டோபர் 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை கிராமத்தில் மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளது.
இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.அதில் குறிப்பாக 17 நிபந்தனை நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் பேசியவர் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அடுத்த வாரம் பூமி பூஜை போடப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
பூமி பூஜை
மேலும் மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு ஒழுக்கத்தோடு வரவேண்டும் எனவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் கட்சிக்கும் விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாத வண்ணம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.
மேலும் எந்த நாளாக இருந்தால் என்ன தலைவர் அளித்தால் போதும் அன்பு கூட்டம் ஒன்று சேர்ந்துவிடும்.இந்த மாநாட்டில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.
மாநாட்டிற்குத் தொண்டர்களை ஒருங்கிணைத்துப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்.