நடிகர் விஜய் விரைவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமா? - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பேட்டி
தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விஜய் சினிமாவை கடந்து விரைவில் அரசியலில் கால் பதிக்கவுள்ளார் என்ற செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அதன் வெளிப்பாடாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
சட்ட ஆலோசனை மையம்
இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், விரைவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்கப்படும் என அறிவித்தார்.
விரைவில் பொதுக்கூட்டமா.?
அதனை தொடர்நது செய்தியாளர்கள் விரைவில் விஜய் தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் புஸ்ஸி ஆனந்த் சிரித்த படியே கடந்து சென்றார்.
மேலும், சர்ச்சையில் சிக்கியுள்ள இயக்கத்தின் நபர் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது,தவறு நடந்தால் யாராக இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கையே எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் பதிலளித்து சென்றார்.