இடுப்பை கிள்ளி அரசியல்; அண்ணாமலை விமர்சனம் - தவெக புஸ்சி ஆனந்த் பதிலடி!
விஜய் குறித்த அண்ணாமலை விமர்சனத்திற்கு புஸ்சி ஆன்ந்த் பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை விமர்சனம்
தவெகவினர் ஸ்கூல் பசங்களை போல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தவெக தங்களின் லிமிட்டை கிராஸ் செய்யக் கூடாது.
நான் களத்தில் இருந்து போராடி கொண்டிருக்கிறேன். அவரை போல் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்யவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இந்நிலையில், தவெக பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புஸ்சி ஆன்ந்த் பதிலடி
இதற்காக திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின் செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்சி ஆனந்த், தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
இதில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான தவெக ஏன் போராட்டம் நடத்தவில்லை?
ஆனால் போராடியவர்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, அதற்கு புஸ்சி ஆனந்த், யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். எங்களின் தலைவர் விஜய் வழியில் மக்கள் சேவை செய்கிறோம். அதனால் விமர்சனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.