புஸ்ஸி ஆனந்த் சொத்து மதிப்பு
புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிகழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தி.நகர் தொகுதியில் களமிறங்குகிறார் புஸ்ஸி ஆனந்த்.
நேற்று விஜய் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது சொத்துமதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகின.

தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட குடும்பத்தினருக்கே கடன் கொடுத்துள்ளார் விஜய், அத்துடன் கடந்த 25 ஆண்டுகளாக தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் ஒரு சொத்தை கூட விஜய் வாங்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில், 2024 முதல் 25 -க்கான நிதி ஆண்டில் ஆனந்தின் ஆண்டு வருவாய் 7,25,000 ஆக இருந்திருக்கிறது.
அவரிடம் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம், டொயோட்டா இன்னோவா, மாருதி ஸ்விப்ட் உள்ளிட்ட வாகனங்கள் இருக்கின்றன.

அவரிடம் 88 கிராம் தங்க நகையும், அவரது மனைவியிடம் 1240 கிராம் நகை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அசையும் மற்றும் அசையா சொத்துகள் சேர்த்து 2,04,91,418 ரூபாயிலான சொத்து மதிப்புகள் உள்ளதாம்.
நேற்று விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மூலம், புஸ்ஸி ஆனந்த்-க்கு 3 கோடி ரூபாய் கடன் கொடுத்ததும் தெரியவந்தது.
