பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் - வினோத சம்பவம்!
தொழிலதிபர் ஒருவர் பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிச்சைக்காரர்
ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக். இவரும் இவரது மனைவியும் இணைந்து அதே மாவட்டத்தில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு பிச்சை எடுத்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், மகன் உள்ளனர்.
இதனிடையே அசோக் தான் பிச்சை எடுத்து சம்பாதிக்கும் பணத்தை மகளின் எதிர்காலத்தை எண்ணி கொஞ்சம், கொஞ்சமாக ரூ.50 ஆயிரம் வரை சேமித்து வைத்து இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்ம ராவ் என்பவர் நடத்தும் உணவகத்தில் சாப்பிடுவதற்காக அசோக் சென்றுள்ளார்.
அப்போது நரசிம்ம ராவ் னக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது எனவும், டனாக கொடுத்தால் வட்டியுடன் திருப்பித் தந்துவிடுவேன் என கூறி அசோக்கிடம் கடன் கேட்டுள்ளார். அதை நம்பி அசோக் தான் சேர்த்து வைத்த ரூ.50 ஆயிரத்தையும் நரசிம்மராவிடம் கொடுத்தார்.
தொழிலதிபர்
மேலும் அதற்கு ஆதாரமாக பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். இந்த நிலையில், ஏற்கனவே தொழிலதிபர் நரசிம்ம ராவிற்கு ரூ.2.75 கோடிக்கு கடன் இருப்பதாக தெரியவந்தது.
எனவே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி தர முடியாது என தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பிறகு கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி பிச்சைக்காரரான அசோக்கிற்கும், நரசிம்ம ராவ் நோட்டீஸ் அனுப்பினார்.
நோட்டீசை கண்ட அசோக் கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது என தெரிந்ததும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார். மேலும், தொழிலதிபரை நம்பி பணம் கொடுத்ததால் தனது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக கவலை தெரிவித்தார்.