வருமான வரிச்சோதனையின் போது விபரீதம்- உயிரை மாய்த்துக்கொண்ட பிரபல தொழிலதிபர்
வருமான வரிசோதனையின் போது பிரபல தொழிலதிபர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தன் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஜே.ராய்
கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சி.ஜே ராய் (Confident Group) நிறுவன தலைவர் ஆவார்.
கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டியுள்ள இக்குழுமம், சில மலையாள படங்களையும் தயாரித்துள்ளது.

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதன்மை விளம்பரதாரராகவும் இருந்துள்ளது, இந்நிலையில் வருமானத்து அதிகமாக சொத்து சேர்த்தல் மற்றும் வரிஏய்ப்பு தொடர்பில் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நேற்று சோதனை நடந்த நிலையில், மதியம் 3 மணியளவில் ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

திடீர் சத்தம்
தொடர்ந்து அறைக்கு சென்ற சி.ஜே ராய், துப்பாக்கியை வைத்து தன் மார்பில் சுட்டுக்கொண்டார், சத்தம் கேட்டு அவரது அறைக்கு சென்ற ஊழியர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எந்த குற்றசாட்டும் இல்லை
இந்நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
குடும்ப உறுப்பினர் புதிய குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் விசாரிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் அழுத்தத்தினாலே ராய் உயிரை மாய்த்து கொண்டதாகவும், அவரது மரணத்திற்கு காரணம் ஐடி குழுவினரே எனவும் ராயின் சகோதரர் சி.ஜே. பாபு தெரிவித்துள்ளார்.
