ஏழை மாணவியின் கல்விக்காக 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கிய தொழிலதிபர்!

businessman 12mango poorstudent
By Irumporai Jun 28, 2021 11:47 AM GMT
Report

பள்ளி பாடங்களை ஆன்லைனில் படிக்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு 12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கி மாணவிக்கு தொழிலதிபர் ஒருவர் உதவி செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜார்க்கண்டில் உள்ள ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் துளசி குமாரி. ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஆனால் துளசி குமாரியிடம் ஸ்மார்ட் போன் இல்லாதத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

ஏழை மாணவியின் கல்விக்காக 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கிய தொழிலதிபர்! | Businessman Buys 12 Mango12 Lakh For Poor Student

தனது பெண்ணுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க குமாரிடம் வசதியில்லை. இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே ஜம்ஷெட்பூருக்கு வந்து துளசியை தேடி கண்டுபிடித்தார்.

அப்போது துளசி தந்தையின் வியபாரத்தை கவனித்து கொண்டிருக்க அந்த பெண்னிடம்  12 மாம்பழங்களை வாங்கினார்.

உடண்டியாக துளசியின் தந்தையின் வங்கி கணக்குக்கு 1.2 லட்ச ரூபாயை உ ஆன்லைன் வழியாக செலுத்தியுள்ளார்.

திகைத்து போய் நின்ற துளசியின் தந்தையிடம் இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வையுங்கள் என கேட்டுக் கொண்டார்.

மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும் துளசிக்கு ஹீட்டே வழங்கியுள்ளார