30 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை; துடித்துடித்து உயிரிழந்த தொழிலதிபர்- நடந்தது என்ன?
தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் உயிரிழப்பு
ஹரியாணா மாநிலம் முர்தால் என்ற பகுதியில் உள்ள தாபா அருகே பார்க்கிங்கில் சுந்தர் மாலிக்(38) என்ற தொழிலதிபர் காரில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மதுபான வியாபாரியான இவரை திடீரென இரண்டு பேர் அவரைத் தாக்க தொடங்கினர். அப்போது, இருவரில் ஒரு நபரை எதிர்த்து தாக்கி கீழே விழ வைத்த போது மற்றொருவர் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில், மாலிக் மீது குண்டுகள் பயந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
நடந்தது என்ன?
இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தர் மாலிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவத்தை பற்றி விசாரணை செய்ய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று டிசிபி அதிகாரி ஆன ராஷ்புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், இரண்டு பேர் கொண்ட கும்பல் சுந்தர் மாலிக் மீது தாக்குதல் நடத்துவதும், 30 முறை துப்பாக்கியால் சுடுவதும் பதிவாகியுள்ளது.
இதில் சுந்தர் மாலிக் சுருண்டு விழுந்து உயிரிழப்பதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ பதிவை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.