குஜராத்தில் தமிழக வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை

6 days ago

சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். அவரது வருகை குறித்த தகவல் நியூ டிடி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயின் வியாபாரியை அழைத்து தன்னிடம் வாங்கிய ஜவுளிகளுக்கு செலுத்த வேண்டிய பழைய பாக்கி ரூ. 4 லட்சம் பணத்தை கேட்டுள்ளார். 

மேலும் ஆத்திரத்தில் வியாபாரியின் சட்டையை கழட்டச் சொல்லி, அவரது இடுப்பில் சேலையை கட்டி கழுத்தில் போர்டு ஒன்றை மாட்டி தெரு தெருவாக இழுத்துச் சென்று துன்புறுத்தியுள்ளார். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மற்றும் அவரது கடை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தமிழக வியாபாரிகள், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்