? பொதுமக்கள் கவனத்திற்கு; சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு பேருந்துகள் இயங்காது

Chennai TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 02:38 AM GMT
Report

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து,

வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இன்று இரவு புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Buses will not operate tonight in 6 districts including Chennai

கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.

பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் சென்னையில் இருந்து 320 கிமீ தொலையில் உள்ளது.இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இரவு பேருந்துகள் இயங்காது 

இந்த நிலையில் கல்வி நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் பொதுமக்களுக்கு புயல் காரணமாக இன்று பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்மாறு கேட்டுக் கொண்டார்.

Buses will not operate tonight in 6 districts including Chennai

இந்நிலையில் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், ஆகிய 6 மாவட்டங்களில் இரவு பேருந்து சேவை அளிக்க கூடாது என்றும், பேருந்து நிலையங்களில் கூட்டமாக மக்கள் நிற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.