இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- தமிழக அரசுஅறிவிப்பு!

covid19 bus tamilnadu
By Irumporai May 22, 2021 10:44 AM GMT
Report

ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்தளர்வுகளற்ற ஊரடங்கை  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி, இன்றும் நாளையும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. '


அந்த வகையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒட்டு மொத்தமாக 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ,சென்னையில் இருந்து 1500 பேருந்துகளும் கோவை சேலம் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 3000 பேருந்துகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

{