Bus Strike - 90% பஸ் இயக்கம் பாதிப்பா..? அவதியில் பொது மக்கள்..?
போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையின்றி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அங்கெங்கெ பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
Bus Strike
6 அம்ச கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்ததை அடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் போராட்டடத்தை அறிவித்துள்ளன.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இன்று 12 மணி முதலே பேருந்து ஓடாது என சங்கங்கள் அறிவித்த நிலையில், பெரும்பாலான பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது.
பிற பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் சென்னையை பொறுத்தவரையில், பிற சங்கங்களை வைத்து பேருந்துகளை இயக்கும் பணியில் மாநகர போக்குவரத்துக் கழக தெரிவித்துள்ள நிலையில், மாநகரில் அட்டவணை போல பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.