பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 15 பேர் உடல் நசுங்கி பலி!
பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்து
இலங்கை, பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றிகொண்டு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒன்பது பெண்கள். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 பேர் பலி
இதில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட இரண்டு பொதுமக்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் முதற்கட்ட விசாரணையில் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.