54 பயணிகளுடன் கால்வாய்க்குள் விழுந்த பேருந்து: 35 பேர் சடலமாக மீட்பு... கோர சம்பவம்

people madhya pradesh sidhi
By Jon Feb 16, 2021 03:19 PM GMT
Report

மத்தியபிரசேதத்தில் 54 பயணிகளுடன் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் 35 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்னர். 54 பயணிகளுடன் சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வரை பேருந்தில் பயணித்த 35 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.