பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்து - 12 பேர் உயிரிழப்பு

Jammu And Kashmir Accident
By Thahir Sep 14, 2022 11:40 AM GMT
Report

ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

பேருந்து விபத்து 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சாவ்ஜியானில் இருந்து மண்டிக்கு சென்று கொண்டிருந்த போது பரேரி நல்லா அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராணுவத்தினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர் உடனடியாக விமானம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல் 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இச்சம்பவம் வருத்தமளிக்கிறது.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இந்த விபத்து மிகுந்த மனவேதனை அளிக்கிறது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.