கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பேருந்து.. சிறைபிடித்த போலீசார்!
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் பேருந்தினை மாவட்ட ஆட்சியரால் சிறைபிடிக்கப்பட்டது
.தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை தற்போது அதிகரித்து வருகிறது, அதனால் போக்குவரத்தில் சிலகட்டுப்பாடுகளை அமலபடுத்தியுள்ளது தமிழக அரசு.
குறிப்பாக பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என கட்டுபாடுகள் அமலில் உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து - திருப்பத்தூர் செல்லும் தனியார் பேருந்து கொரோனா தொற்று ஏற்படும் விதத்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி உடனடியாக பயனிகளை இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தார்.
அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்தை செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.