கோலி சிக்ஸ் அடிக்கும் போது 100-ல் சென்ற பேருந்து - மிரண்டு போன பயணிகள்!
ஐ.பி.எல். போட்டியை செல்போனில் பார்த்தபடி ஓட்டுநர் அரசு பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல்.
மஹாராஷ்டிரா மாநிலம் தாதரில் இருந்து ஸ்வர்கேட் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் ராம்தேவ் யாதவ் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த சமயத்தில் ஐபிஎல் 2025 சீசன் தொடர் தொடங்கியது.
இதனை காண செல்போனை எடுத்துள்ளார். அப்போது கோலி சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் பேருந்தின் வேகமுள் நூறைக் கடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.
இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.அதுமட்டுமில்லாமல், அது மட்டுமின்றி அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆகியோரை அவர் டேக் செய்திருந்தார்.
விஷயம் விஸ்வரூபம் எடுக்க பேருந்து ஓட்டுநரை வீட்டிலிருந்து பத்திரமாக ஐபிஎல் மேட்ச் பார்க்குமாறு கேட்டுக் கொண்டு சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.