தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து - 45 பேர் பலியான பரிதாபம்

bulgaria busaccident
By Petchi Avudaiappan Nov 23, 2021 08:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பல்கேரியா நாட்டில், சுற்றுலாப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 45 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து, வடக்கு மசிடோனியாவின் ஸ்கோப்ஜே நகருக்கு சென்று கொண்டிருந்த பஸ் பல்கேரியா அருகேயுள்ள நெடுஞ்சாலையின் தடுப்பில் மோதி பின்னர் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும்7 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பல்கேரியா அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளது.